2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

வவுனியாவில் சோசலிஸ இளைஞர் சங்கத்தின் கையெழுத்து வேட்டை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத், ரொமேஸ் மதுசங்க


பாலஸ்தீனத்தின் சுதந்திர ஒருமைப்பாட்டை சீர்குழைத்து பாலஸ்தீன் மக்களின் மனித உரிமைகளை துண்டிக்கப்பட்டு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏகாதிபத்தியம் நடத்துகின்ற தாக்குதல்களுக்கும் அநியாயங்களுக்கும் எதிராக சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிர்மாணிப்பதற்கான போராட்டம் என தெரிவித்து சோசலிஸ இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கையெழுத்து வேட்டை இன்று (6) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சோசலிஸ இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளருமாக பிமல் ரட்நாயக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதன் போது பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--