Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வட மாகாண பெண்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு திணைக்களத்திற்கு 52 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார, புனர்வாழ்வு, சமூக சேவைகள் அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள வட மாகாண சுகாதார அமைச்சின் உப அலுவலகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எமது அமைச்சின் கீழ் சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூக சேவைகள், புனர்வாழ்வு, பெண்கள் விவகாரம், சிறுவர் நன்னடத்தையும் பராமரிப்பும் உட்பட 6 திணைக்களங்கள் உள்ளன.
வட மாகாணசபையில் பெண்கள் விவகாரத்துக்கும் புனர்வாழ்வுக்குமான திணைக்களங்கள் பெயரளவில் இருந்தால், அதற்குரிய கட்டமைப்புகள் நிதியொதுக்கீடுகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டுக்குரிய நிதியில் சுமார் 40 மில்லியன் ரூபாய் புனர்வாழ்வுக்கும் 12 மில்லியன் ரூபாய் பெண்கள் அபிவிருத்திக்கும் என ஒதுக்கியுள்ளோம்.
இந்நிதியை கொண்டு பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்கு அல்லது வாழ்வாதாரத்துக்குரிய திட்டங்களை நடைமுறைப்படத்துவதற்கும் புனர்வாழ்வு திணைக்களத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியில், அவசர தேவையென கருத்தப்படும் திட்டங்களுக்காக வவுனியா மாவட்டத்திலும் யாழ். மாவட்டத்திலும் நீண்ட காலமாக மக்கள் தங்கியிருக்கின்ற முகாம்களை மழை காலத்திற்கு முன்னர் செப்பனிட்டு கூரைகளை திருத்தி அமைக்கும் தற்காலிக வேலையை முன்னெடுத்துள்ளோம்.
அதேவேளை, எமது மாகாணத்தில் பலருக்கு மலசலகூட பிரச்சனை உள்ளது. எனவே, மலசலகூடங்களை அமைக்கும் பணியையும் இந்நிதியின் ஊடாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதில் விசேட தேவைக்குட்பட்டோருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அந்நிதியின் ஊடாக விசேட தேவைக்குரியவர்களுக்கான மலசலகூடத்தை அமைக்க முடியும். அதேவேளை சுகாதார அமைச்சின் ஊடாக 12 மில்லியன் ரூபாவை மலசலகூடத்திற்காக ஒதுக்கியுள்ளோம். ஏனையோருக்கு மலசலகூடம் அமைப்பதற்காக 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பபடிவத்தை ஒவ்வொருவரும் தமது பகுதிக்குரிய பொது சுகாதார பரிசோதகரிடம் பெற்று, நிரப்பிக் கொடுத்து விண்ணப்பித்ததன் ஒழுங்கில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago