Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 11 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா மற்றும் செட்டிகுளம், சிங்களபிரிவு, நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8,087 குடும்பங்களைச் சேர்ந்த 27,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 3,866 ஏக்கர் நெல் வேளாண்மையும் சேதமடைந்துள்ளது என வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் 37 கிராம சேவையாளர் பிரிவுகளில் 5,394 குடும்பங்களைச் சேர்ந்த 20,410 பேரும், 5,044 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. செட்டிகுளத்தில் 790 குடும்பங்களைச் சேர்ந்த 2,870 பேர் 12 கிராம சேவையாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள பிரிவில் 940 குடும்பங்களைச் சேர்ந்த 3,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,419 வீடுகள் சேதமடைந்துள்ளது. நெடுங்கேணியில் 923 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு ள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
அதேநேரத்தில் பாவற்குளத்தில் நான்கு வான்கதவுகள் 20 அங்குலத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக நெளுக்குளம் - நேரியகுளம் வீதியும், பூவரசன்குளம் - செட்டிகுளம் வீதியும் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர் தெரிவித்தார்.
வவுனியா - திருமலைக்கான ஹொறவப்பொத்தானை வீதியும் துண்டிக்கப்பட்டுள்ளது வெள்ளம் பாய்வதினால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியாவில் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளதினால் பொதுமக்கள் குளங்களில் நீராடுவதினை நிறுத்துமாறு பொலிஸாரும், நீர்பாசன திணைக்கள அதிகாரிகளும் கேட்டுள்ளனர்.
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago