Super User / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை 60 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
'நிக்கொட்' நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்தப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று 'நிக்கொட்' நிறுவனப் பணிப்பாளர் திருமதி ரஞ்சினி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
போர்க்காலச் சூழலின்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பெரும் சேதங்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் இதனைப் புனரமைப்புச் செய்வதற்கான பொறுப்பை 'நிக்கொட்' நிறுவனம் ஏற்றுள்ளது. வைத்தியர் விடுதிப் புனரமைப்பு மற்றும் உட்கட்டுமானம் உட்பட அனைத்துப் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அடுத்த மாதமளவில் பணிகள் அரம்பிக்கப்படும்.- என்றார்.
6 minute ago
18 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
25 minute ago
32 minute ago