2021 மார்ச் 01, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் வெடிபொருள்கள் மீட்பு

Niroshini   / 2021 ஜனவரி 14 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவின் இருவேறு பகுதிகளில் இருந்து, நேற்று முன்தினம் (13), வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு - அளம்பில், சாலை ஆகிய பகுதிகளில் இருந்தே, வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

அளம்பில் பகுதியில், வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய், 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் - 2, ஆர்.பி.ஜி குண்டுகளின் சார்ஜர்கள் - 4, வோக்கி டோக்கி - 1, 81 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு ஒன்றின் பின்பக்கங்கள் - 2, 40 மில்லிமீற்றர் எம்.பி.எம்.ஜி குண்டுகள் - மூன்று என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சாலை பகுதியில், ஆர்.பி.ஜி குண்டுகள் - 2 , கைக்குண்டுகள் - 2, மிதிவெடி - 1, ஆர்.பி.ஜி குண்டுகளின் பாகம் - 1, டெட்டனேட்டரின் பகுதி - 1 என்பன மீட்கப்பட்டுள்ளன.

இரு பகுதிகளிலும் இருந்து மீட்கப்பட்ட பெடிபொருள்கள் முல்லைத்தீவு பொலழஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவுக்கமைய, அவற்றைத்  தகர்த்து அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .