Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 18, திங்கட்கிழமை
Niroshini / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
“கடந்த செப்டெம்பர் மாதம் தீயினால் எரிந்து சேதமான கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும்” என வட மாகாண ஆளுநா் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர், கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் பொதுச்சந்தை வர்த்தகர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“கிளிநொச்சி பொதுச் சந்தை தீயினால் எரிந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்னும் இரண்டு வாரத்துக்குள் எரிந்து கடைகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கும் தொடர்ச்சியாக தீயணைப்பு பிரிவை ஏற்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. அத்தோடு, நிரந்தர கட்டடம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, வியாபாரிகள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிப்பெற்றுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் கருத்துத் தெரிவிக்கையில்,
சந்தை விவகாரம் தொடா்பில் ஆளுநர் பல தடவைகள் நேரடியாக விஜயம் செய்து வியாபாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொண்ட நடவடிக்கைக்களுக்கு அமைவாக நட்டஈடு மற்றும் தீயணைப்பு பிரிவு சந்தைக்கான நிரந்தர கட்டடம் என்பன சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
அதற்காக வியாபாரிகள் சார்பில் நன்றி கூறவேண்டும். மேலும், ஆளுநரின் இந்த முயற்சிகளை ஒரு சிலர் களங்கம் விளைவித்து வருவதோடு, அவரின் உழைப்புக்கும் உரிமை கோருகின்றனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 minute ago
49 minute ago
2 hours ago