2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் பயிற்சி நிறைவு விழா

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

 

                                        

(எஸ்.ஜெனி)

இரண்டு மாத பொலிஸ் பயிற்சி வகுப்புக்களின் நிறைவு விழா மன்னார் பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

வன்னி பகுதிகளில் சேவைகளை மேற்கொள்வதற்காகவே பொலிஸ் பிரிவின் ஒரு தொகுதியினர் விசேட பயிற்சிகளை முடித்து கடமையில் ஈடுபடவுள்ளனர்.

கடந்த ஜுலை ஒன்பதாம் திகதி முதல் செப்டம்பர் 23ஆம் திகதி வரையான இரண்டு மாத காலப்பகுதியில் விசேட பயிற்சிகளில் ஈடுபட்ட பொலிஸ் பிரிவினருக்கு விசேட வாழ்த்துக்களை மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்த தெரிவித்தார்.

மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்த தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னர் பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X