2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவு: மாவை

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

மனிதாபிமான அடிப்படையில் எமது மக்களுக்கு அரசினால் மேற்கொள்ளப்படும் சகல வேலைத் திட்டங்களுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

துணுக்காயில் நடைபெற்ற நிவாரண பொருட்கள்  வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தை, திருமுறுகண்டி,  ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு நகரம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 5234 குடும்பத்தினருக்கு ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்படட உலர் உணவு பொதிகள் இன்று செவ்வாய்க்கிழமை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
 
மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன் பிரதியமைச்சர் முரளிதரன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா முல்லைத்தீவு அரச அதிபர் என். வேதநாயகன் உள்ளிட்ட  பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 4500 ரூபாய் பெறுமதி வாய்ந்த உலர் உணவு பொருட்கள் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--