2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 19

Super User   / 2011 ஜனவரி 19 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1607: பிலிப்பைன்ஸின் மிகப்பழைமையான தேவாலயமான சான் அகஸ்ட்டின் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.

1806: நன்னம்பிக்கை முனையை பிரிட்டன் கைப்பற்றியது.

1939: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி ஏடன் நகரை கைப்ற்றியது.

1883: தோமஸ் அல்வா எடிஸனால் அமைக்கப்பட்ட முதலாவது மின்சார ஒளியூட்டல் தொகுதி அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகரில்  செயற்பட ஆரம்பித்தது.

1899: ஆங்கிலோ எகிப்து சூடான் ஸ்தாபிக்கப்பட்டது.

1935: ஆண்களுக்கான பிரீவ் வகை உள்ளாடை உலகில் முதல் தடவையாக கூப்பர்ஸ் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்பட்டது.

1942: பர்மாவை ஜப்பான் ஆக்கிரமித்தது.

1945: சோவியத் படைகள் லோட்ஸ்கெட்டோ நகரை நாஸிகளிடமிருந்து விடுவித்தனர். இந்நகரின் 2 லட்சம் குடியிருப்பாளர்களில் சுமார் 900 பேரே உயிர்தப்பினர்.

1946: ஜப்பானிய யுத்த குற்றவாளிகளை விசாரிப்பதற்காக டோக்கியோவில் சர்வதேச இராணுவ விசாரணைக் குழுவொன்றை அமெரிக்க தளபதி டக்ளஸ் மெக்ஆர்தர்

1949:கியூபாவை இஸ்ரேல் அங்கீகரித்தது.

1952: ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க - ஈரானிய அதிகாரிகளிடையே கையெழுத்திடப்பட்டது.

1966: இந்தியாவில் பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் இடம்பெற்ற போட்டியில் இந்திரா காந்திர வெற்றி பெற்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X