Super User / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
1928: இந்திய பௌதிவியல் விஞ்ஞானி சி.வி.ராமன், 'ராமன் விளைவை' கண்டுபிடித்தார்.
1940: அமெரிக்காவில் போர்ட் ஹாம் பல்லைக்கழகத்திற்கும் பிட்ஸ்பர்க் பல்லைக்கழகத்திற்கும் இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கூடைப்பந்தாட்டப் போட்டியொன்று நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை இதுவே முதல் தடவை.
1942: சுந்தா நீரிணையில் ஜப்பானிய கடற்படையினருடனான மோதலில் அமெரிக்காவின் யுத்த கப்பலான யூ.எஸ்.எஸ். ஹஸ்டன்
மூழ்கடிக்கப்பட்டதில் 693 பேர் பலி. அதே மோதலில் அவுஸ்திரேலியாவின் எம்.எம்.ஏ..எஸ். பேர் கப்பலும் மூழ்கடிக்கப்பட்டு 375 பேர் பலியாகினர்.
1947: தாய்வானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 10,000 -30,000 பேர் பலி.
1975: லண்டனில் ரயில் விபத்தினால் 43 பேர் பலி.
1986: தொழிலாளர் வர்க்கத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் ஆதரவானவராக விளங்கியவரும், வீதிகளில் பாதுகாப்பின்றி நடமாடும் பிரதமராக பெயர் பெற்றவருமான சுவீடனின் பிரதமர் ஒலோவ் பால்மே, தலைநகர் ஸ்டொக்ஹோமில் திரையரங்கொன்றிலிருந்து நள்ளிரவு நேரத்தில் மனைவியுடன் வீடு நோக்கி நடந்து சென்றபோது துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் மனைவி காயமடைந்தார். இக்கொலையின் சூத்தரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
1997: அஸர்பைஜானில் ஏற்பட்ட பூகம்பத்தால் 1100 பேர் பலி.
1997: ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 3000 பேர் பலி.
2005: லெபனான் ஆதரவாளராக கருதப்பட்ட சிரிய பிரதமர் ஒமர் கராமி, சிரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் ராஜினாமா செய்தார்.
2005: ஈராக்கின் அல் ஹிலாஹ் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதலினால் 127 பேர் பலி.
43 minute ago
48 minute ago
4 hours ago
VEERGIN FERNANDO Monday, 28 February 2011 05:28 PM
உங்களின் செய்திகளை வாசிக்க ரொம்பவும் மகிழ்ச்சியை தருகின்றது . நன்றி
-அன்புடன் வீர்ஜின் பெர்னாண்டோ
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
4 hours ago