2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

இந்த வாரபலன்கள் (15.08.2010 – 21.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்த வாரபலன்கள் (15.08.2010 – 21.08.2010)



அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள். 

சொல் செயல்களில் தெளிவும்சஞ்சல மனம் பிறகு தெளிவு உடையவர்களான மேஷ ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு நீண்ட நாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்க கூடும். முயற்சி, செய்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். சாப்பாட்டில் வெறுப்பு ஏற்படலாம். வியாபாரத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்புண்டு, நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அரச ஊழியர்கள் மூலம் உதவி கிடைக்கக்கூடும். நினைத்தபடி பண வரவுகிட்டும். தொலைந்த பொருட்கள் கிடைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் பெண்கள் மூலம் உதவி கிடைக்கக் கூடும், அதனால் இன்பம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திகதி : 15
அதிஷ்ட நிறம்: வெள்ளை, இளம் நீலம்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 16 பிற்பகல் 11.54 இலிருந்து ஓகஸ்ட் 19 காலை 07.57 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே.!
இந்தவாரம் உங்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அவதானம் தேவை. உடலுக்கு ஒவ்வாத உணவை தவிர்க்கவும். பெண்களால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் சில சிக்கல், பகை ஏற்படும். அதிக கவனத்துடன் நடப்பது நல்லது. புதிய முயற்சி தோல்வியைக் காட்டும். பணவரவு தடை ஏற்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். இந்த வாரத்தில் செய்யும் செயல்களில் மிக நிதானத்துடன் நடப்பது நல்லது.
அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, இளம் சாம்பல்.
வழிபாடு: சிவன் (சந்திரன்).

சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 19 காலை 07.57 மணியில் இருந்து ஓகஸ்ட் 21 மாலை 06.52 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தீவிரமோ தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு பெண்களுடன் விவாதம், கடினமான பேச்சுவார்த்தை ஏற்பட வாய்ப்புண்டு. வார்த்தைகள் பிரயோகிப்பதில் நிதானம் தேவை. புதிய நண்பர்கள் நட்பு கிடைத்தல், சில மனச்சுமை, குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. அவதானம் தேவை. அரச ஊழியர்களால் வெற்றி கிடைக்கும். நினைத்தபடி பண வரவு கூடும். தொழில் புரியுமிடத்தில் மேலதிகாரிகளுடன் பகை ஏற்பட வாய்ப்புண்டு. அவதானத்துடன் நடக்கவும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அவதானம் தேவை.
அதிர்ஷ்ட திகதி : 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி.

சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 21 மாலை 06.52 மணியில் இருந்து ஓகஸ்ட் 24 காலை 07.16 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும், அனைவரிடமும் அன்பு கொண்ட கடகராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் அதிகளவு லாபம் கிடைக்கும், அதனால் பணவரவு கூடும். பொழுதுபோக்குக்காக அதிகளவு செலவு செய்ய நேரிடும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். பெண்களால் உதவி கிடைக்க வாய்ப்புண்டு. அதன் மூலம் இன்பம் ஏற்படும். சில உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். தொலைந்த பொருட்களை கண்டிட வாய்ப்புண்டு. பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்கலாம்.
அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
வழிபாடு: சிவன் (சந்திரன்).


மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
வாக்கு சாதுர்யம், மனோபலம் உள்ளவர்கள். சற்று அகம்பாவம் உள்ளவர்கள். அதிகார தன்மை உடைய சிம்ம ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு உயர் அதிகாரிகளுடன் பகை ஏற்படக்கூடும். நிதானத்துடன் செயற்படவும். நீண்டநாள் முயற்சி செய்த காரியத்தில் வெற்றி கிடைக்கக் கூடும். அதனால் மன நிம்மதி, சந்தோஷம் ஏற்படும். சில தீய நட்பால் நஷ்டம் ஏற்படலாம். அவதானம் தேவை. இடமாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும். பணவரவு ஏற்படும். சுவையான உணவருந்தக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். மனதில் சில குழப்பம், சிக்கல் ஏற்பட இடமுண்டு. செய்யும் காரியத்தில் நிதானத்துடன் நடக்கவும்.
அதிர்ஷ்ட திகதி : 19
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: சிவன் (சூரியன்)



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு அதிக உற்சாகத்துடன் காரியங்களை செய்யக் கூடிய வழிகிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தூரதேசத்தில் இருந்து அதிகநாள் எதிர்பார்த்த நல்ல செய்தி கேள்விப் படகூடும். பிறருடைய உதவி நாடவேண்டிய நிலை ஏற்படும். உடல் உபாதைகள்  ஏற்பட வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.
அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.
எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துல்லியமாக எடைபோடக்கூடியவர்கள், ஆடம்பரமான வாழ்க்கை உள்ள துலா ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு பெண்களுடன் விவாதம், கடினமான பேச்சுவார்த்தை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே வார்த்தைகள் பிரயோகிப்பதில் நிதானம் தேவை. சில குழப்பம், சிக்கல் ஏற்படக் கூடும், அவதானத்துடன் செயற்படவும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் இன்பம். அரச ஊழியர்கள் மூலம் உதவி கிடைக்க வாய்ப்புண்டு. தொடங்கும் காரியத்தில் வெற்றி கிட்டும். உடலுக்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும். பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்கலாம்.
அதிர்ஷ்ட திகதி: --
அதிர்ஷ்ட நிறம்:  ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். முயற்சி செய்த காரியத்தில் வெற்றி கிடைக்கக் கூடும். அதனால் பணவரவு கூடும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் இன்பம் கிடைக்கக்கூடும். அறுசுவையில் உணவு கிடைக்கும். உடல் நலிவு ஏற்பட வாய்ப்புண்டு. நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கம் பெரியோர்களை சந்திக்க வாய்ப்புண்டு. தொழில் செய்யுமிடத்தில் மேலதிகாரிகளுடன் பகை ஏற்படாத வகையில் நடக்கவும்.
அதிர்ஷ்ட திகதி:
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்  
வழிபாடு: பிரம்மா



மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
வைராக்கியம், திடசிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு மனதுக்கு பயம், பதட்டம் ஏற்படக் கூடும். சாப்பாட்டில் வெறுப்பு, இதனால்  உடல் நலம் பாதிக்கும். தீய நட்பால் நஷ்டம் ஏற்படலாம். இசையில் ஆர்வம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் அதிக லாபம் அதனால் பணவரவு கூடும். புதிய திட்டத்தில் வெற்றி கிடைக்கும். பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். சில நல்ல செய்தி கேள்விப்படக்கூடும், அதனால் மனநிம்மதி ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்ட திகதி : 20
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, இளம் சாம்பல்
வழிபாடு: சிவன் (சந்திரன்)



உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தெய்வீக பலன் பெற்றவர்களே, நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்த மகர ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு அதிக உற்சாகத்துடன் நல்ல காரியங்களை செய்ய வழி கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி, அதனால் நல்ல தூக்கம் கிடைக்கும். அரச ஊழியர்கள் மூலம் உதவி கிடைக்கும். உஷ்ணம், காய்ச்சல், தலைவலி போன்ற நோய் ஏற்படக் கூடும். வேண்டாத உணவால் பிரச்சினை ஏற்படலாம். இடமாற்றம் ஏற்படக்கூடும். அறுசுவையான உணவு கிடைக்கும். எந்த செயல்களையும் நிதானத்துடன் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட திகதி: 20
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, இளம் சாம்பல்
வழிபாடு: சிவன் (சந்திரன்)



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே, புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம், செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு மனதில் சில குழப்பம், சங்கடங்கள் ஏற்படக் கூடும். நினைத்த காரியத்தில் வெற்றி கிட்ட வாய்ப்புண்டு. தூரதேசத்தில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி கேள்விப்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் உறவினர்கள் அன்யோன்யம் கூடும். அதனால் இன்பம், மன நிம்மதி ஏற்படும். பண வரவில் சில தடை காட்டும். பிறர் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்படும். உடலுக்கு ஒவ்வாத உணவை தவிர்க்கவும். இசையில் ஆர்வம் அதிகரிக்கும். எந்த செயல்களையும் நிதானத்துடன் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் நீலம்
வழிபாடு: பெருமாள்.  



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம் விட்டுப்பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே.!
இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த தடை நீங்கி வெற்றி கிட்டும், அதனால் பணவரவு கூடும். பெண்கள் மூலம் உதவி வாய்ப்பு கிட்டும். அறுசுவையான உணவு கிடைக்கும். தொலைந்த பொருட்கள் கிடைக்க வாய்ப்புண்டு. அதிக செலவு ஏற்படக்கூடும். கடினமான பேச்சுவார்த்தை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே வார்த்தைகள் பிரயோகிப்பதில் நிதானம் தேவை. உடலுக்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும். பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்கலாம்.
அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டு துணி  
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 14 மாலை 07.32 மணியிலிருந்து ஓகஸ்ட் 16 மாலை 11.54 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--