2021 மே 06, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (25.09.2011 - 01.10.2011)

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (25.09.2011 - 01.10.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கம்பீரமான தோற்றமும் ஞானமும் நேருக்கு நேர் சந்திக்கும் துணிவும் கொண்ட மேட ராசி அன்பர்களே...!

 இந்த வாரம் உங்களுக்கு, முயற்சியால் செய்யும் காரியங்கள் தடையின்றி நிறைவேறும். வெளிப் பிரயாணங்களுக்கு அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். அழகிய ஆடை ஆபாரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும்.
தொலைதூர செய்திகள் நன்மையாக அமைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் உற்றர்ர் உறவினர்களின் வருகை ஏற்படும். விநோத விளையாட்டுக்களில் ஈடுபடும் போது மிகக்கவனம் தேவை. பெண்களின் அக்கரையும் அனுசரிப்பும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும். தொழில் ஸ்தானத்தில் மேல் அதிகாரிகளின் உதவியுடன் நவீன நுட்பங்களை கையாண்டு ஆதாயம் அடையலாம். தேவையற்ற பிரச்சினைகளுக்கு முன்னிற்;காமல் தமது கடைமைகளை சரிவர செய்து வர வாழ்வில் சங்கடங்களை தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 27

அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு

வழிபாடு: பார்வதி



சந்திராஷ்டமம்

செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி காலை 12.07 மணியிலிருந்து ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி காலை 03.00 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்ளை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்;பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கவர்ச்சியான பார்வையும் எதிலும் விட்டுகொடுத்து செயற்படும் இடப ராசி அன்பர்களே...!

இந்ந வாரம் உங்களுக்கு, நெருங்கிய நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். வியாபார உத்தியோகஸ்தர்கள் தமது பணிகளை உற்சாகத்துடன் மேற்கொள்வார்கள். சுவையான உணவு உண்ணலாம். குடும்பத்தில் சுபகாரியங்களினால் உறவினர்கள் ஒன்றுபட வாய்ப்புண்டு. அரச உதவிகள் தேடி வரக்கூடும். வெளிப் பிரயாணங்கள் சிறு அலைச்சலை ஏற்படுத்தக்கூடும். பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளை வெளிக்காட்டி பயனடைவார்கள். பெண்களுடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் நீங்கி அக்கரையுடன் செயற்படுவார்கள். அன்றாட வேலைத்திட்டங்களில் சிந்தித்து செயற்படுவதால் வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.

அதிர்ஷ்ட திகதி: 30

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

வழிபாடு: பெருமாள்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

புன்னகை தவழும் முகமும் பிறரை கவரும் வசிகரமும் தனி ஆற்றலினால் காரியத்தை சாதிக்கும் மிதுன ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு, புதிய காரியங்களை திட்டமிட்டு செயற்படுவதால் வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை சீராக பாதுகாப்பதன் மூலம் உஷ்ணம் சம்பந்தமான உபாதைகளை தவிர்த்துக் கொள்ளலாம். வியாபராத்தில் நவீன தொடர்புகளினால் நல்ல திருப்புமுனை ஏற்படும். குடும்பத்தில் சகோதர சகோதரரிகள் ஒத்துழைப்புடன் செயற்படுவார்கள். நீண்ட தூர செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்தக்கூடும். பணப் பிரச்சினைகளின் போது பிறரின் உதவிகள் மன ஆறுதலை தரும். தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்துக்கொள்வது நன்மைக்கே. நிம்மதியான உறக்கம் மனதுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். பெரியோர்களின் அறிவுரைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதால் வாழ்க்கையில் மேன்மை அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 30

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுத்துணி

வழிபாடு: குருபகவான்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

சுறுசுறுப்பும் விழிப்புணர்வும் அழகிய தோற்றமும் இனிய சுபாவமும் கொண்ட கடக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு கூட்டுத்தொழிலை விரிவுபடுத்த நண்பர்களின்
உதவிகள் கிடைக்கக்கூடும். இதனால் பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். மேலும் குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சியைத் தரும். செலவுகள் சற்று அதிகரிக்கும். இசையில் நாட்டம் அதிகரிப்பதுடன் மனதில் சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். வாகன சாரதிகளுக்கு தூரப் பயணங்களின் மூலம் அதிக இலாபத்தை பெற்றுகொள்ளலாம். அரச வேலைவாய்ப்புக்கள் தேடிவரக்கூடும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று நம்பிக்கையோடு வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். மனதில் நன்மையானதை மட்டும் சிந்தித்து செயற்படுவதால் தீமைகள் விலகிச்செல்லும்.

அதிர்ஷ்ட திகதி: 30

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

வழிபாடு: பெருமாள்




மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

நிமிர்ந்த நெஞ்சமும் நேர்கொண்ட பார்வையும் வாக்குவன்மையும் வணங்கத் தன்மையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். சுற்றுலாப் பயணங்களின் போது அழகிய ஆச்சர்யமான பொருள் காணக் கிடைக்கும். தடைப்பட்டிருந்த வேலைதிட்டங்களை உடனுக்குடன் முடிப்பீர்கள். இடம் அல்லது தொழில் மாற்றங்கள் வழி உண்டு. மனதில் சிறு குழப்பங்கள் துன்பம் ஏற்பட்டு நீங்கும். பகைவர்களினால் சில பிரச்சினைகள் தேடிவரக்கூடும். சுயசிந்தனையுடன் செயற்படவும். பணநெருக்கடி ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் செலுத்தவும். விநோத விiயாட்டுகளில் ஈடுபடும் போது மிக கவனம் தேவை. புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். நமது வாழ்க்கை முன்மாதியாக இருக்கும் பெரியோர்களை கண்டு ஆசீர்வாதம் பெற்று வாழ வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 25

அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு

வழிபாடு: பார்வதி


 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எளிமையும் வலிமையும் இணைய உண்மைக்கு மதிப்பளித்து அதன்படி வாழ எண்ணும் கன்னி ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரம் தொடர்பான சில பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். மனதுக்கு அமைதி தரும் தூய்மையான ஆடைகளை அணியலாம். பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டவைக்கு செலவு செய்ய நேரிடும். தொடங்கிய காரியத்தில் வெற்றி கிடைக்கும். உடலுக்கு ஒவ்வாத உணவினால் அஜீர்ணம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும் நலனில் அக்கரை செலுத்தவும். அறிமுகமற்ற நட்புக்களை தவிர்க்கவும். மேல் அதிகாரிகளின் உதவியுடன் புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தலாம். எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும். பெண்களின் ஆதரவு அதிகரிக்க கூடும். செய்யும் செயலிலும் பிறருடன் பேசும் வார்த்தைகளிலும் பொருமையை கடைபிடிப்பது நன்று.

அதிர்ஷ்ட திகதி: 28

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்

வழிபாடு: சிவன் (சூரியன்)



சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

இறைவன் காட்டும் வழியை வாழ்வில் துணையாகக் கொண்டு பிறரை மதித்து செயற்படும் துலாம் ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் பெண்களுடன் சிறு வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். வியாபாரத்தில் பணத் தட்டுபாடுகள் ஏற்படும். இதனால் புதிய வாய்ப்புக்கள் பின்தள்ளபடக்கூடும். நீண்ட நாள் எதிர்பார்த்த நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். அறுசுவையான உணவு உண்ணலாம். தொடங்கும் காரியங்களில் சில தடங்கள் சங்டத்தை ஏற்படுத்தும். அனாவசிய பொருள் செலவுகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களுடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். வெளிதேசங்களிருந்து வரும் செய்திகள் அலைச்சலை ஏற்படுத்தக்கூடும். எச்சந்தர்ப்பத்திலும் இறைவனை மறவாது நன்மைகள் செய்து வருவது வாழ்க்கைக்கு உகந்ததாகும்.

அதிர்ஷ்ட திகதி: 28

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்

வழிபாடு: சிவன் (சூரியன்)




விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

முன்கோபம் அதிகம் உள்ள மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் மதி மந்திரியாக வலம் வரும் விருட்சிக ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு பொருள் சேர்கை ஏற்படும். குடும்ப
உறவினர்களின் அன்பும் அக்கரையும் மனதுக்கு உற்சாகம்
தரும். பொழுபோக்குகளுக்காக சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான சில இடமாற்றங்கள் இலாபகரமாக அமையும். புதுமையான பொருள் காணக் கிடைத்தல். நண்பர்களின் உதவியுடன் புதிய வேலைப் பணிகளை உடனுக்குடன் செயற்படுத்தலாம். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தூய்மையான ஆடைகளை அணியலாம். அரசாங்க ஊழியர்களினால் சில சலுகை கிடைக்கக்கூடும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் செலுத்தவும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை நீக்கி இவ்வார நாட்களை நன்நாட்ளாக நேசிக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 30

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்

வழிபாடு: சிவன் (சந்திரன்)





மூலம். பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அறிவு கூர்மையுடனும் எந்த செயலையும் தைரியத்துடனும் செய்யும் ஆற்றலை பெற்ற தனசு ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்ளுக்கு விநோத விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். நெருங்கி உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள்
கிடைக்கும். வியாபாரத்தில் உயர் அதிகாரிகளின் நட்புக்கள் நல்ல ஆதாயத்தை ஏற்படுத்தும். செலவுகள் சற்று அதிகரிக்கக்கூடும். மனதுக்கு பயத்தை ஏற்படுத்தும் சில சம்பவங்கள் நடைபெறக்கூடும். மனம் தளராது நம்பிக்னையுடன் செயற்படவும். புதிய பயணங்கள் செல்ல பிறரின் உதவிகள் கிடைக்கும். பெரியோர்களின் அறிவுறைகள் வாழ்க்கை புதிய வழிநடத்தலை ஏற்படுத்தும். பெண்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். அழகிய ஆடை உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். ஆலய அனுஷ்டானங்களில் அதிக நாட்டம் செலுத்துவதால் மனஅமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 30

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

வழிபாடு: பெருமாள்




உத்திராடம் 2, 3. 4, திருவோணம், அவிட்டம் 1, 2 -ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் இயற்கையாக பெற்ற கடினமாக உழைக்கு சுபாவம் கொண்ட மகர ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு சில மனக் கஷ்டங்கள் தோன்றி மறையும். அறுசுவையான உணவுகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளை தொடங்க அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். திருடர்களிடம் கவனம் தேவை. குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களுடன் விநோத விளையாட்டுக்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் நவீன திட்டங்களை முன்னெடுக்கலாம். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும் நாவடக்கம் அவசியம். தொலைந்த பொருள் கிடைக்க வாய்ப்புண்டு. வாழ்வில் எச்சந்தர்ப்பத்திலும் மனிதர் மனங்களை புரிந்து செயற்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 30

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

வழிபாடு: பெருமாள்


சந்திராஷ்டமம்

செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி காலை 12.16 மணியிலிருந்து செப்டெம்பா மாதம் 26ஆம் திகதி காலை 12.43 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்ளை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

செய்யும் செயலை சிறப்பாகவும் செம்மையாகவும் செயற்படுத்தும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு புண்ணிய காரியங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். சிலர் புதிய
சாதனைகளை கையாண்டு மேன்மை அடைவார்கள். திடீர் பயணங்கள் செலவுகளை ஏற்படுத்தினாலும் பயனுள்ளதாக அமையும். நட்பு வட்டம் விரிவடையும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் நட்டத்தை ஏற்படுத்தும். அவதானத்துடன் செயற்படவும். தேவையற்ற வாய்வார்த்தைகள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும். சரும நோய்கள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வாழ்வில் வரும் சோதனைகளை கண்டு பின்செல்லாது பொருமையுடன் செயற்படுவது நன்று.

அதிர்ஷ்ட திகதி: 27

அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு

வழிபாடு: பார்வதி



சந்திராஷ்டமம்


செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி காலை 12.43 மணியிலிருந்து செப்டெம்பர் 28ஆம் திகதி மாலை 11.56 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்ளை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின்
பிரச்சினைகளில் முன்னிற்;பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு:
இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

ஒரு கை செய்த உதவி மறு கை அறியாத வண்ணம் சுதந்திரமாக செயற்;படும் மீனம் ராசி அன்பர்களே...!

இந்த வாரம் உங்களுக்கு, எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தூய்மையான ஆடைகள் அணியலாம். தோழிலை மேம்படுத்த அரசாங் ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். அறுசுவையான உணவு உண்ணலாம். அயல் தேசங்களிருந்து செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் பெண்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்க கூடும். உல்லாசப் பிரயாணங்களுக்கு அதிக செலவு செய்யநேரிடும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். பகைவர்களுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. வார்த்தைகளில் நிதானம் தேவை. நவீன தொடர்புகள் சிறு அலைச்சலை ஏற்படுத்தினாலும் அதிக இலாபத்தை பெற்றுக் கொள்ளலாம். தெய்வீக சிந்தனைகளை வாழ்வில் பின்பற்றி வாழ்வதனால் மனதில் சோர்வுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 26

அதிர்ஷ்ட நிறம்: சாம்பள், நீலம்

வழிபாடு: (நவகிரகம்)



சந்திராஷ்டமம்


செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி மாலை 11.56 மணியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி காலை 12.07 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து
உண்ணுதல், புதிய காரியங்ளை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .