2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (27.11.2011 - 03.12.2011)

A.P.Mathan   / 2011 நவம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (27.11.2011 - 03.12.2011)

மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் பெற்ற, எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படும் மேட ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு சிலவிதமான பிரச்சினைகள், சிக்கல்கள் தேடிவரக்கூடும். மிகவும் பொறுமையுடன் செயல்படவும். வரவுக்கு மீறிய செலவுகளினால் பணப் பிரச்சினைகள் ஏற்படும். புதிய காரியங்கள் சற்று அலைச்சலை தந்தாலும் நற்பலனை அடைவீர்கள். பெண்களுடன் பிறரின் பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதை தவிர்க்கவும். அரசாங்க உத்தியோகத்தர்களின் நட்புறவு நல்ல வாய்ப்புக்களை பெற்று தரக்கூடும். குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். இவ்வார இறுதியில் நீங்கள் தோல்வியடைந்த காரியங்களில் மீண்டும் வெற்றி பெற சந்தர்ப்பம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
முன்கோபம் அதிகம் கொண்ட, மற்றவர்களை எளிதில் நம்பாத இடப ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு தாமதமான காரியங்கள் விரைவில் நடைபெறக்கூடும். வியாபார முன்னேற்றத்திற்காக அரசாங்க அதிகாரிகளின் உதவிகள் பக்கபலமாக இருக்கும். நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் அழகிய ஆடை, உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். தேவையற்ற பிரச்சினைகளினால் குழப்பம், சங்கடங்கள் ஏற்படும். பொழுதுபோக்குகளுக்கு அதிக பண விரயங்களை மேற்கொள்வீர்கள். உடலுக்கு ஒவ்வாத உணவினால் சரும நோய்கள் வந்து நீங்கும், நலனைப் பாதுகாக்கவும். இவ்வார இறுதியில் நமது வாழ்க்கையில் இன்ப துன்பங்களில் ஒன்றித்திருக்கும் இறைவனை தரிசித்து வழிபடுவது அவசியம்.
அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

சந்திராஷ்டமம்
நவம்பர் 26ஆம் திகதி மாலை 10.24 மணியிலிருந்து நவம்பர் 28ஆம் திகதி காலை 1.40 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
பிறரின் துன்ப நேரங்களில் கருணை உள்ளத்தோடு கரம் கொடுக்கும் மிதுனம் ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு புதிய வேலை தொடர்பான திட்டங்களுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும். சிலர் தமது கடின முயற்சியினால், திறமையினால் பல சாதனைகளை முன்னெடுப்பார்கள். அறிமுகமற்ற நண்பர்களுடன் சேர்ந்து தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நீண்டநாள் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கக்கூடும். ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் சக உழியர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளும் கிடைக்கக்கூடும். இவ்வார இறுதியில் நன்மையான காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுவதனால் கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட திகதி: 28
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

நவம்பர் 28ஆம் திகதி காலை 01.40 மணியிலிருந்து டிசெம்பர் 01ஆம் திகதி காலை 08.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
சிறிய விடயத்தையும் பெரிய அளவில் கற்பனை செய்யும் சுபாவமும் அமைதியாக செயல்படும் கடக ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு பிறரின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். நல்ல நண்பர்களின் அறிமுகம் மகிழ்ச்சி தரும். நிம்மதியான தூக்கம் இனிதே கிடைக்கும். ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடும்போது வெண்மையான ஆடைகளை அணியலாம். இசையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்பகரமான செய்திகள் கிடைக்கக்கூடும், குடும்பத்தில் பெண்களினால் சுபவிசேஷங்கள் நடைபெறும். மேலும் பெரியார்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்கக் கூடும். இவ்வார இறுதியில் மனதுக்கு உற்சாகம் தரும் இனிமையான சம்பவங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி

டிசெம்பர் 01ஆம் திகதி காலை 08.37 மணியிலிருந்து டிசெம்பர் 03ஆம் திகதி மாலை 07.08 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
நினைத்ததை முடிக்கும் மன வலிமையும், நேர்மையான நெஞ்சமும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!
இந்தவாரம் நீங்கள் நினைத்த காரியத்தை சாதித்து வெற்றி அடைவீர்கள். உற்சாகத்துடன் அன்றாட பணிகளை உடனுக்குடன் செய்து முடிக்கலாம். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும். தூர தேசங்களிலிருந்து வரும் செய்திகள் மனதுக்கு அமைதி தரும். புதிதாக தொடங்கும் வியாபாரங்களில் சில இடமாற்றங்கள் ஏற்படலாம். விசித்திரமான பொருள் காணக்கிடைக்கும். இவ்வார இறுதியில் பெண்களுடன் அநாவசிய பேச்சுவார்த்தைகளினால் சங்கடங்கள், கவலைகள் ஏற்படக்கூடும். வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். 
அதிர்ஷ்ட திகதி: 29
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
யாரிடமும் எளிதில் பழகாத, பழகியவர்களை எச்சந்தர்ப்பத்திலும் மறவாத உள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு நண்பர்களுடன் இணைந்து புதிய வேலை திட்டங்களை மேற்கொள்ளலாம். செயல்களில் தடுமாற்றங்களும் பயமும் ஏற்படக்கூடும். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் நவீன நுட்பங்களை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்களுடன் பேசும்போது நிதானம் தேவை. அரசாங்க ஊழியர்களின் மூலம் நல்ல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வார இறுதியில் வாழ்க்கையில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கால நேரங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் நன்மையை கண்டடைவோம்.
அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மாதுலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
வாழ்க்கையில் யாருக்கும் இடையூறின்றி சுற்றி திரியும் பறவைகளை போல் சுதந்திரமாக வாழ விரும்பும் துலாம் ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தாருடன் பிரார்த்தனை, பூஜைகளில் ஈடுபடுவதால் சங்கடங்கள், கவலைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். இன்பமான உறக்கம் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகளுக்காக வெளிதேச பயணங்களை மேற்கொள்வீர்கள். சிக்கனமற்ற செலவுகளினால் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும். பணம் சேமிப்பதில் கடிக உழைப்பு தேவை. அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களினால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இவ்வார இறுதியில் நமக்கு முன்மாதிரியாக விளங்கும் பெரியார்களை கண்டு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட திகதி: 30
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மாவிருட்ச்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
எப்பொழுதும் வெகுளியாக பேசும் குணமும் யாரிடமும் எதையும் எதிர்பாராத தன்மையும் கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமும் லாபமும் காணப்படும். தொலைதூர பயணங்களின் போது திருடர்களிடம் மிக கவனத்துடன் இருப்பது நல்லது. நண்பர்களின் உதவியினால் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும். குடும்ப உறவினர்களின் மூலம் மகிழச்சியான செய்திகள் கிடைக்கும். இசைத்துறையில் ஈர்ப்பு அதிகரிக்கும், இதனால் மனஅமைதி கிடைக்கும். இவ்வார இறுதியில் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் முன்யோசனையுடன் செயல்படுவதால் தடைகளை தவிர்த்துக்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட திகதி: 01
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
எல்லோரிடமும் பண்பாக பேசும் குணமும் பிறரை அனுசரித்து நடந்துகொள்ளும் தனுசு ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு பெண்களுடன் சிறு மனக் கசப்புக்கள் ஏற்படக்கூடும். அஜீரணம் சம்பந்தமான கோளாறுகளினால் சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படுதல். கேட்பார் பேச்சை கேட்டு அனாவசிய பிரச்சினைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மேல் அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் செயல்படவும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்த கூடும், இதனால் பணப் பிரச்சினை அதிகரித்தல். தீய நண்பர்களின் சகவாசங்களினால் கஷ்டங்கள் ஏற்படும். இவ்வார இறுதியில் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை மறந்து நம்பிக்கையோடு இறைவனை வழிபடுவதனால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதிமகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
கவலைகளை மறந்து களிப்புமிகு முகத்துடன் கனிவாகப் பேசும் மகர ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு புதிய காரியங்களை தொடங்கக்கூடியதாயிருக்கும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். புதிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை. அறுசுவையான உணவுகளை உண்ணலாம். வியாபாரத்தில் நவீன சாதனங்களை பயன்படுத்தி முன்னேற்றம் அடையலாம். மனபயங்கள், சங்கடங்கள் வந்து நீங்கும். ஆன்மீக யாத்திரைகள் பயணங்களின் போது மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் இன்பகரமான செய்திகள் கிடைக்கும். இவ்வார இறுதியில் புண்ணிய ஸ்தலங்கள் சென்று நம்பிக்கையுடன் பிரார்த்தனைகளில் ஈடுபடலாம்.
அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
ஊறுமிக்க எண்ணங்களும் கம்பீரமான தோற்றமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!
இந்தவாரம் நீங்கள் பல புதிய சாதனைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அயல்தேச பயணங்களின் போது நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் பெண்கள் அக்கறையுடனும் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடின உழைப்பினால் அதிக லாபம் அடைவீர்கள். தூய்மையான ஆடைகளை அணியலாம். இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும். பகைவர்களினால் தேவையற்ற சிக்கல்கள், துன்பங்கள் ஏற்படக்கூடும், நிதானம் தேவை. விநோத விளையாட்டுகளுக்கு அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். இவ்வார இறுதியில் துன்பங்களை கண்டு கலங்காது மதியால் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திகதி: 02
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: (நவகிரகம்)மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
எதிலும் கலை நுணுக்கத்துடன் காரியங்களை செய்யும் மீனம் ராசி அன்பர்களே..!
இந்தவாரம் உங்களுக்கு வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடிவரக்கூடும். பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும். வீடு அல்லது தொழில் மாற்றங்களுக்கு இடமுண்டு. குடும்பத்தில் சுபவிசேஷங்களினால் சொந்தபந்தங்களின் வருகை உற்சாகத்தை தரும். நட்பு வட்டம் விரிவடைதல். நல்ல காரியங்களில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். ஒவ்வாத உணவினால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். மனதுக்கு திருப்தி தரும் செய்திகள் வந்து சேரும். பெண்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். இவ்வார இறுதியில் எந்த காரியத்தையும் அவசரமின்றி மிக ஆறுதலாக முன்னெடுப்பது நல்லது.
அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .