2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

திரௌபதை அம்மன் ஆலய தீப்பள்ளைய உற்சவம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்.எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கிழக்கு மாகாணத்தின் பிரபல்யமான அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 18ஆவது நாள் தீப்பள்ளையம் என அழைக்கப்படும் உற்சவத்தின் சிறப்பு நாள் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.

இதில் முக்கிய நிகழ்வாக பாண்டிருப்பு கடற்கரையில் நடைபெற்ற மஞ்சள் பூசும் நிகழ்வின் காட்சிகளையும், இதனைத் தொடர்ந்து தீ மிதிப்பையும், பின்னர் நடைபெற்ற சாட்டை அடித்தல் நிகழ்வையும் படங்களில் காணலாம்.

வருடாந்த உற்சவம் இம்மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகி இறுதி நாள் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாகாபாரதக் கதையை மக்கள் மத்தியில் பிரல்யப்படுத்தும் வகையில் இந்த உற்சவம் அமைந்துள்ளது.

பாண்டவர்கள் வனவாசம் செல்லுதல், தவநிலை நிகழ்வு அருச்சுனன் பாசுபதம் பெறுவதற்காக தவம் செய்தல் ஆகியவைகள்  சித்தரிக்கப்பட்டன.

நாளை சனிக்கிழமை பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கு முடிசூட்டும் நிகழ்வு நடைபெறும்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--