2020 மே 29, வெள்ளிக்கிழமை

தலைப்பு செய்திகளுக்காக இளைஞன செய்த கொடூர செயல்!

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகங்களில் தனது பெயர் வருவதற்காக சிறுவனை 10ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர எண்ணம் கொண்ட இளைஞர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவர் ஜான்டி பிரேவரி கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி லண்டனில் உள்ள ‘டேட் மாடர்ன்’ அருங்காட்சியகத்துக்கு சென்றார். 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது தாயுடன் அந்த அருங்காட்சியகத்துக்கு வந்திருந்தான். அப்போது ஜான்டி திடீரென அந்த 6 வயது சிறுவனை தூக்கிக்கொண்டு அருங்காட்சியகத்தின் மாடிக்கு ஓடினான்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார் மற்றும் அங்கிருந்தவர்கள் ஜான்டியை விரட்டினர். எனினும் கட்டிடத்தின் 10ஆவது மாடியில் இருந்து சிறுவனை கீழே தூக்கி எறிந்து விட்டார். நல்லவேளையாக 5ஆவது மாடியில் இருந்த மேற்கூரையின் மீது சிறுவன் விழுந்து காயத்துடன் உயிர் தப்பினான். 

இதற்கிடையே ஜான்டியை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான  வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர், மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், டி.வி. மற்றும் பத்திரிகைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் தான் இப்படி செய்ததாக கூறினார். 

இதனையடுத்து ஜான்டியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கான தண்டனை விவரம் வருகிற பெப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X