2020 நவம்பர் 28, சனிக்கிழமை

15 வயது சிறுமியின் வயிற்றில் 1.6 கிலோகிராம் முடி

Kogilavani   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்பதாம் தரத்தில் கல்வி பயின்று வந்த சிறுமியின் வயிற்றிலிருந்து 1.6 கிலோகிராம் முடி சத்திரசிகிசையின் மூலம் அகற்றப்பட்ட சம்பவமொன்று மும்பையில் இடம்பெற்றுள்ளது.

மும்பையை சேர்ந்;த சியா ஷிண்டே என்ற 15 வயது சிறுமியின் வயிற்றிலிருந்தே இவ்வாறு முடி அகற்றப்பட்டுள்ளது.

இச்சிறுமி  ட்ரைகாட்டிலோமேனியா, ட்ரைகோபெசோர் குறைபாடுகளுடன் காணப்பட்டுள்ளார். இக்குறைப்பாடு உடையவர்களுக்கு தமது முடியை பிய்த்து உண்ணவேண்டும் போல் இருக்குமாம்.

இந்நிலையில் இவர் தனது 10 வயதில் இருந்தே இவ்வாறு முடியை உண்டு வந்துள்ளார்.

சிறுமி 5 ஆம் வகுப்பில் கற்கும்போதுதான் அவர் முடி உண்பது குறித்த விடயத்தை சிறுமியின் தந்தை அறிந்துகொண்டுள்ளார்.

'எனது மனைவி சியாவின் வாயில் இருந்து முடி உருண்டை ஒன்றை வெளியே எடுத்ததுடன் இதற்கு மேலும் இவ்வாறு செய்யவேண்டாம் என்று சியாவை கண்டித்தார்' என சியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஆனால், சியா தனது தாயின்; பேச்சை கேட்காமல் தொடர்ச்சியாக முடியை உண்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் மும்பையில் உள்ள செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இதன்பின் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின்போது அவரது வயிற்றில் உணவு செரிக்கக்கூட இடமில்லாத நிலையில் முடி அடரந்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முடி அகற்றப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .