2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மார்புக்கச்சை அரும்பொருள் காட்சியகம் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 ஏப்ரல் 22 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலே முதன்முதலில் மார்புக்கச்சை அரும்பொருள் காட்சியகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு சீன பிரஜையொருவர் திட்டமிட்டுள்ளார்.

சுகாதார தொண்டரான சென் குயிங்சு என்ற 45 வயது நபரே இத்தகைய திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.

இதற்காக இவர் கடந்த இரண்டு தசாப்தங்களாக 5000 இற்கும் மேற்பட்ட மார்புக்கச்சைகளை சேகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள தனது கிராமத்தில் பெண்களுக்காக திறக்கப்படவுள்ள மார்புக்கச்சை அரும்பொருட் காட்சியகத்துக்கு இன்னும் இரண்டு மடங்கு மார்புக்கச்சைகளை சேகரிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

'உடல் நலன் குறித்த அறிவை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது எனது கடமை. பெண்களின் உடல் நலனில் விசேடமாக கவனம் செலுத்துவதில் அதிக அக்கறை கொண்டுள்ளேன்.

பெண்கள் அணியும் மார்ப்புக்கச்சைகளில் அதிக கவனம் செலுத்துகின்றேன். இந்த அரும்பொருட் காட்சியகத்துக்கு அதிகமான மார்புக் கச்சைகளை எனது கல்லூரி நண்பிகளே அன்பளிப்பு செய்தனர்.

எனது இத்தகைய செயற்பாட்டில் எனது நணபர்களுக்கு சற்றும் விரும்பம் இல்லை. ஆனால், இதனை நான் புதிய விடயமாக கருதவில்லை' என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .