2021 மார்ச் 08, திங்கட்கிழமை

கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் விசாரணை

Niroshini   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அகரன்

 

வவுனியாவில்கடந்த 1465 நாட்களாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம்பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர்இன்றுவிசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

அவர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாகஅமைந்துள்ள கொட்டகையில்குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

விசாரணையின் பின்னர் கருத்து தெரிவித்த அவர்பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவை சேர்ந்த இரண்டுஉத்தியோகத்தர்கள் இன்றையதினம் என்னிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர் என்றார்.

 

நாம் மேற்கொண்டுவரும் உணவுதவிர்ப்பு போராட்டம் தொடர்பாக அவர்கள் கேட்டறிந்தனர்.

 

கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அமெரிக்கஐரோப்பிய ஒன்றிய கொடிகளுடன் வவுனியா நகரசபை மண்டபத்தில் இருந்து நடைப்பயணமாக வந்தீர்களா என கேட்டிருந்தனர்

 

பல வருடங்களாக போராடிவரும் நிலையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லைஇந்த நிலையில்இலங்கை  அரசுமீது நம்பிக்கை இழந்துள்ளநாம் எமக்கான நீதியை பெறுவதற்கு சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளதாக அவர்களிடம் தெரிவித்திருந்தேன்போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதிவருகின்றதா என அவர்கள் கேட்டிருந்தனர்நாங்கள் நீதியை மாத்திரமே எதிர்பார்த்து நிற்கின்றோம் நிதியைஅல்ல என்ற விடயத்தினை அவர்களிற்கு உறுதியாக கூறியிருந்தேன்” என்றார்.

 

அமெரிக்க தூதுவர் நாளையதினம் யாழ்பாணம்வரவுள்ள நிலையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர்அரசு இவ்வாறானஅச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து நாங்கள்பின்வாங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்

 

அவரைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவி .ஜெயவனிதாவிடமும் சிலவிடயங்கள் தொடர்பாக பொலிஸார்கேட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .