2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது; 3 வாள்கள் மீட்பு

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்தேக சபரின் வீட்டில் இருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த  20 ஆம் திகதி கந்தர் மடம் பகுதியில் வைத்து காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் பி.திருமாறன் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சம்பவம் இடம்பெற்று சில நாட்களின் பின்பு சந்தேகத்தின் பேரில் யாழ். நகரப்பகுதியில் இருந்து ஒருவர் கைதுசெய்யப்பட்டார். விசாரணையின் போது, 3 வாள்கள் அவரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டப்பட்டதுடன்;, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவiர் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .