2021 ஜனவரி 27, புதன்கிழமை

யூரோ கிண்ணத் தொடரில் வேல்ஸ்

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கு வேல்ஸ் தகுதிபெற்றுள்ளது.

தம்நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற ஹங்கேரியுடனான குழு ஈ போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அக்குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்றதைத் தொடர்ந்தே யூரோ கிண்ணத் தொடருக்கு வேல்ஸ் தகுதிபெற்றது. வேல்ஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஆரோன் றம்சி பெற்றிருந்தார்.

இதேவேளை, தம்நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற சைப்ரஸுடனான குழு ஐ போட்டியொன்றை 6-1 என்ற கோல் கணக்கில், யூரோ கிண்ணத் தொடருக்கு ஏற்கெனவே தகுதிபெற்ற பெல்ஜியம் வென்றது. பெல்ஜியம் சார்பாக, கிறிஸ்டியன் பென்டெக்கே, கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், யனிக் கராஸ்கோ ஒரு கோலையும் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தம்நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற எஸ்தோனியாவுடனான குழு சி போட்டியொன்றை 5-0 என்ற கோல் கணக்கில், யூரோ கிண்ணத் தொடருக்கு ஏற்கெனவே தகுதிபெற்ற நெதர்லாந்து வென்றது. நெதர்லாந்து சார்பாக, ஜோர்ஜினியோ விஜ்நால்டும் மூன்று கோல்களையும், நதன் அகே, மைறோன் பெளடு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, தம்நாட்டில்இன்று அதிகாலை நடைபெற்ற வட அயர்லாந்துடனான குழு சி போட்டியொன்றை 6-1 என்ற கோல் கணக்கில், யூரோ கிண்ணத் தொடருக்கு ஏற்கெனவே தகுதிபெற்ற ஜேர்மனி வென்றது. ஜேர்மனி சார்பாக, சேர்ஜி நர்பி மூன்று கோல்களையும், லியோன் கொரெட்ஸ்கா இரண்டு கோல்களையும், ஜூலியன் பிரான்ட் ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், தம்நாட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்லோவேனியாவுடனான குழு ஜி போட்டியொன்றை 3-2 என்ற கோல் கணக்கில், யூரோ கிண்ணத் தொடருக்கு ஏற்கெனவே தகுதிபெற்ற போலந்து வென்றது. போலந்து சார்பாக, செபஸ்டியன் ஸிஸ்மன்ஸ்கி, றொபேர்ட் லெவன்டோஸ்கி, ஜசெக் கொரல்ஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஸ்லோவேனியா சார்பாக, டிம் மடவஸ், ஜோசிப் இலிசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .