Editorial / 2018 நவம்பர் 26 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
19.11.2018
சிங்கர் ஸ்ரீ லங்கா, கொமர்ஷல் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் அ.ப.வி சுட்டி மறைப் பெறுமதியையும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 299 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் R I L புரொப்பர்டி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு டயலொக் அக்ஸியாடா மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.
20.11.2018
முகம்மது நபி ஸல் அவர்களின் பிறந்த தின பொது வர்த்தக வங்கி விடுமுறை காரணமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
21.11.2018
டயலொக் அக்ஸியாடா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 594 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர்பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு தேசிய அபிவிருத்தி வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. மேலும், வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.
22.11.2018
பௌர்ணமி தின விடுமுறை காரணமாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
23.11.2018
டயலொக் அக்ஸியாடா, ஸ்ரீ லங்கா டெலிகொம் மற்றும் டிஸ்டிலரீஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 580 மில்லியனாக பதிவாகியிருந்தது. ஹற்றன் நஷனல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், அமானா டகாஃபுல் மற்றும் சம்பத் வங்கி ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
வாரத்தில் அ.ப.வி.சு 0.43% சரிவையும் S&P SL20 0.20% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 492 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026