2020 மார்ச் 30, திங்கட்கிழமை

இந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்!

Editorial   / 2020 பெப்ரவரி 20 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பிற்கு இடையே ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு இடையே பெரும் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இண்டஸ்ட்ரியல் கிரேன் எனப்படும் மிகப்பெரிய கிரேனைப் பயன்படுத்தி அங்கு படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது. 

நேற்று (19) ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அறிவுறுத்தலையும் மீறி 150 அடி உயரத்தில் கிரேன் மேலே இருக்கும் நிலையிலேயே அதனை நகர்த்துவதற்கு முற்பட்டுள்ளனர்.

ஆனால், அதிக பாரம் கொண்ட கிரேன் எதிர்பாராதவிதமாக உடைந்து விழுந்தது. அதில் கீழே பலருக்கும் பெரும் காயங்கள் ஏற்பட்டது. 

இந்த கோர விபத்தில் ஒரு உதவி இயக்குநர், புரொடக்‌ஷன் டீமில் வேலை பார்க்கும் ஒருவர், ஒரு செட் அசிஸ்டன்ட் என மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். 

மேலும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து வெறும் 4 அடி தொலைவில் இருந்த கமல்ஹாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

பெரும் விபத்து ஏற்பட்ட நிலையில் கமல்ஹாசனை உடனடியாக அவரது வீட்டிற்கு செல்ல அனைவரும் வற்புறுத்தினர். 

ஆனால் அவர் அங்கிருந்து செல்வதற்கு மறுத்துவிட்டார். மிகுந்த வருத்தத்திற்கு உள்ளான கமல்ஹாசன் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தினார். 

அம்பியுபுலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உதவி புரிந்தார்.

இந்த சம்பவம் சினிமா உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .