2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சின்னத்திரை நடிகை திடீர் மரணம்

J.A. George   / 2020 நவம்பர் 23 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தொலைக்காட்சி நடிகை சிறுநீரகப் பிரச்னை காரணமாக திடீரென உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

தொலைக்காட்சி  நடிகை லீனா ஆச்சாரியா, ஆப் கே ஆ ஜானே சே, மேரி ஹனிகரக் பிவி, கிளாஸ் ஆஃப் 2020 உள்பட சில டிவி தொடர்களில் நடித்திருக்கிறார். 

இவருக்கு கடந்த ஒரு வருடமாக சிறுநீரகப் பிரச்னை இருந்தது. அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால், இதுபற்றி நெருங்கிய நண்பர்களுக்கு கூட அவர் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 30. இதை அவருடன், கிளாஸ் ஆஃப் 2020 என்ற தொடரில் நடித்த நடிகர் ரோகம் மெஹ்ரா உறுதிப்படுத்தியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .