2020 ஜூன் 04, வியாழக்கிழமை

‘முதல் க்ரஷ் அஜித்’

Editorial   / 2019 மே 05 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷாலுடன் தற்போது அயோக்கிய படத்தில் நடித்து முடித்துள்ள ராஷி கன்னா, படத்தின் ப்ரமோஷனில் ஈடுப்பட்டுள்ளார்.

படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு படத்தை தவிர்த்து அவர் மற்ற சினிமா சார்ந்த விஷயங்களியும் பேசினார். அவர் பகிர்ந்துக்கொண்ட சில தகவல்கள் பின்வருமாறு,

“நான் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். அவர் தனது படங்களில் ஹீரோயினுக்கு லிப் டூ லிப் கொடுப்பதில் தவறு இல்லை.

தற்போதைய தலைமுறையினருக்கு முத்தம் எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அதுவும் படங்களில் முத்தக் காட்சிகள் சாதாரணமாகிவிட்டது. மேலும், எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட முதல் க்ரஷ் என்றால் அது பாலிவுட் நடிகர் ஷாருக்கான். கோலிவுட்டில் எனது முதல் க்ரஷ் அஜித் சார்.

அவரின் சிரிப்பு அசத்தலாக இருக்கும். அவரின் படம் பார்க்கும்போது அவர் எப்படா சிரிப்பார் என்று காத்திருப்பேன். அஜித் சார் நடித்த விஸ்வாசம் படம் பார்த்திருக்கிறேன்” என  அவர் தெரிவித்தார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X