2020 ஜூன் 04, வியாழக்கிழமை

மும்முனைப் போட்டியில் மே 17

Editorial   / 2019 மே 13 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வாரம் மே 17ஆம் திகதி, மூன்று திரைப்படங்கள் வெளியாவதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' மற்றும் எஸ்ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'மொன்ஸ்டர்', கவின், ரம்யா நம்பீசன் நடித்துள்ள 'நட்புனா என்னானு தெரியுமா' ஆகிய திரைப்படங்கள் அன்றைய தினம் வெளியாக உள்ளன.

இந்நிலையில், கடைசி நேரத்தில் மேலும் சில திரைப்படங்கள் சேர வாய்ப்புள்ளதாக அறியமுடிகிறது.

மே 24ஆம் திகதியன்று, என்னென்ன திரைப்படங்கள் வெளிவரும் என்பதை, இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. ஆனால், மே 31இல், சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள 'என்ஜிகே' திரைப்படம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படத்துடன், வேறு சில திரைப்படங்களும் போட்டியிடாது என்றே தெரிகிறது.

எவ்வாறாயினும், இவ்வார இறுதியில் போட்டியிடவுள்ள திரைப்படங்கள் குறித்து, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனால் இவை, மும்முனைப் போட்டியாக அமையவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X