2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

ஹொலிவுட் நடிகர் ரான் லீப்மேன் மரணம்

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்லாட்டர் ஹவுஸ் 5, செவன் ஹவர்ஸ் டு ஜட்ஜ்மென்ட், வயர் இஸ் போப்பா, தி சூப்பர் காப்ஸ், பிரண்ட்ஸ் உள்பட பல ஹொலிவுட் படங்களில் நடித்தவர் ரான் லீப்மேன்.

 ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான எம்மி விருது உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.

நியூயார்க்கில் வசித்து வந்த ரான் லீப்மேனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி திடீரென்று மரணம் அடைந்தார். 

அவருக்கு வயது 82. ரான் லீப்மேன் மறைவுக்கு ஹொலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--