2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்

J.A. George   / 2020 நவம்பர் 23 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலட்சியத்திற்காக பத்து வருடங்களுக்கு மேலாக காத்திருந்து தனது காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார் எடிட்டர் செல்வா.

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி எடிட்டராக உள்ளவர் செல்வா. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

தற்போது கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார்.

செல்வாவும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர். 

சினிமாவில் எதையாவது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக பத்துவருடங்களாக காதலர்களாகவே காத்திருந்திருந்தார்கள்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராக செல்வா ஒரு இடத்தை எட்டிய பிறகு திருமணம் செய்வது குறித்து இரு வீட்டாரிடமும் செல்வா-அனிதா இருவரும் சம்மதம் பெற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .