2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ரஜினியிடம் ஆசிபெற்ற ஐஸ்வர்யா

A.P.Mathan   / 2010 ஜூலை 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்திரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தன. ரஜினி – ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியே இறுதியாகப் படமாக்கப்பட்டது.

இந்த இறுதிக்கட்ட எந்திரன் படப்பிடிப்பு நிறைவடைந்து அனைத்து திரைப்பட குழுவினரும் கட்டித்தழுவி, கைலாகு கொடுத்து விடைபெற்றுச் சென்றனர். இச்சந்தர்ப்பத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகை ஐஸ்வர்யா ராய், ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார்.

நெகிழ்ந்துபோன ரஜினி, நீயும் என் மருமகள் மாதிரித்தான் என்று ஆசி வழங்கி மும்பைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

பிரம்மாண்ட படைப்பாக உருவாகிவரும் எந்திரனின் பாடல்கள் எதிர்வரும் 31ஆம் திகதி மலேசியாவில் வெளியிட்டு வைக்கப்படுகிறது. ஓகஸ்ட் இறுதியில் எந்திரன் வெளிவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--