2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

அனுஷ்காவின் ஆண் துணை..!

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுற்றி சுற்றி பலரை காதலித்தாலும் அதனை வெளிக்காட்டுவதற்கு எந்த நடிகையும் எளிதில் விரும்புவதில்லை. ஆனால், இந்த நடைமுறைக்கு விதிவிலக்காக நடிகை அனுஷ்கா (அதாங்க... சிங்கம் நடிகை) தனது காதலை பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அனுஷ்கா தனக்கு ஒரு காதலன் இருப்பதை பகிரங்கப்படுத்தினார். 'என்னுடைய காதலனை இரண்டு வருடங்களில் கரம்பிடிக்கவிருக்கிறேன். இப்பொழுதே அவருடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. நிச்சயமாக என்னுடைய அன்புக்குரிய காதலனை அனைவருக்கும் பகிரங்கப்படுத்தும் காலம் வரும். அதுவரை பொறுந்திருங்கள்...' என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.

'என்னுடைய குடும்பத்தின் விரும்பத்திற்கேற்ப டொக்டர், என்ஜினியர் ஆகாவிட்டாலும் எனக்குப்பிடித்த யோகா கலையில் சிறந்து விளங்கினேன். நல்லவேளை நான் சந்நியாசி ஆகவில்லை...' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய உயரத்தினைப்போலவே உள்ளமும் உயர்ந்துள்ள நடிகை அனுஷ்காவின் காதலை வெளிப்படுத்திய தைரியம் ஏனைய நடிகைகளுக்கு பலத்தினை கொடுத்திருப்பதென்னமோ உண்மைதான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X