Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 மே 19 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாளக்குழுவொன்றின் தலைவரான, மாக்கந்துர மதூஷின் மற்றுமொரு நெருங்கிய சகா கம்பளையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கொலைகள், கொள்ளை, நிதி மோசடி உள்ளிட்ட பல குற்றசாட்டுகளுடன் தொடர்புடையவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கடந்த 14ஆம் திகதி பெல்மடுல்ல பிரதேச வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி, மதூஷை பிணையில் எடுக்க 5 மில்லியன் ரூபாய் பணம் தேவையெனக் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வர்த்தகர் பொலிஸாருக்கு செய்த முறைபாட்டையடுத்தே, யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பட்டதாரியான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகநபர் பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
33 minute ago
35 minute ago