2020 ஜூன் 01, திங்கட்கிழமை

நேர்முகப் பரீட்சை நடத்தும் ரோபோ

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலுமுள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன.

அந்த வகையில் சுவீடனில் பிரபல நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிக்கு ஆள்கள் எடுக்கும் ரோபோவை உருவாக்கி உள்ளது. இது மிகவும் நுட்பமான கணினி மொழிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

மனிதர்களை போல் அல்லாமல், மிகுந்த நடுநிலை தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவுடன் மைக்ரோ போன் கொண்டு எளிதாக உரையாடவும், அதன் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இயலும். இந்த ரோபோ தற்போது சுவிடிஷ் மட்டுமே பேசக்கூடியதாகும்.

மனிதர்களாகிய நம்மில் பலர் ஒருவரை பார்த்ததும் தவறாக எண்ணும் வழக்கம் உள்ளது. இதனால் பல திறமை வாய்ந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். இதனை தவிர்ப்பதற்காகவே இந்த ரோபோ பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X