Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகரின் கட்டுப்பாட்டில் முன்னாள் நடிகை ஒருவர் சிக்கி தவித்து வருகிறாராம்.
தமிழில் பல வருடங்களுக்கு முன் அறிமுகம் ஆனவர் அந்த நடிகை. தொடர்ந்து ஒரே இயக்குநரின் படத்தில் அந்த நடிகை நடித்து வந்தார். அவர் எடுத்த காலனி படமும் பெரிய ஹிட் அடித்தது.
இதனால் யோசித்த அந்த நடிகை அந்த இயக்குநரையே கடைசியில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டு, அந்த நடிகை தனியாள் ஆனார்.
இப்போது அந்த காலனி நடிகை இன்னொரு முன்னணி நடிகர் ஒருவருடன் நட்பில் இருக்கிறார். சென்னையில்தான் இவர்கள் ஒன்றாக வசித்து வருகிறார்கள். சினிமாவில் மீண்டும் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறித்தான் அந்த காலனி நடிகையுடன் இந்த பிரபல நடிகர் நட்பானார்.
ஆனால் அந்த பிரபல நடிகர் அதன்பின் காலனி நடிகைக்கு பெரிதாக வாய்ப்பு வாங்கித்தரவில்லை. வந்த வாய்ப்பையும் நிறைய காரணங்கள் சொல்லி நிராகரிக்க வைத்துள்ளார். வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும், வெளியே செல்ல கூடாது என்று அந்த நடிகைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த பிரபல நடிகருக்கு வேறு குடும்பம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பிரபல நடிகர் உடன் இருந்தால் பிரச்சனை என்று காலனி நடிகை வெளியே செல்ல முடிவு எடுத்துள்ளார். ஆனால் அதற்கு பிரபல நடிகர் அனுமதிக்கவில்லையாம்.
இதனால் தற்போது மது தொடங்கி பல்வேறு போதை பொருட்களுக்கு அந்த நடிகை அடிமை ஆகிவிட்டாராம். சினிமாவும் போய்விட்டது, திருமணமும் போய்விட்டது, இவரும் இப்படி செய்கிறாரே என்று அந்த காலனி நடிகை புலம்பி வருகிறாராம்
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025