2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

வெலிக்கடை சிறையில் கைதிக்கு கொரோனா

Editorial   / 2020 ஜூலை 07 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தக்காடு பிரசேதத்தில் அமைந்துள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையத்தில் புனர்வாழ்வுக்கு குறித்த நபர் உட்படுத்தப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கடந்த ஜுன் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு குறித்த நபர் மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை,  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட அனைருக்கும்  பீ சி ஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--