A.K.M. Ramzy / 2021 மே 17 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வின் பணிப்பின் பேரில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலமையினை கருத்திற் கொண்டு 10 நாட்களுக்குள் 10,000 கட்டில்கள் அமைக்கும் செயல்திட்டம் தேசிய இளைஞர்கள் கழக சம்மேளனத்திடம் ஒப்படைக்கப் பட்டு நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது.
இதன் அடிப்படையில் அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தினால் 10 கட்டில்கள் தயாரிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 50,000 ரூபா நிதியுதவியுடனும் ஏனைய நிதிகள் தனவந்தர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்போடு தயாரிக்கப்பட்டுவருகிறது. இவை அனைத்தும் கொரோனா தொற்றிற்காக தயார் செய்யப்படும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இச் செயல்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற பணிபுரியும் இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, பிரதேச இளைஞர் சேவை அதிகாரி, பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர்கழக சம்மேளனம் சார்பாக அதன் பிரதி தலைவர் உ.மு. தில்ஷான் நன்றிகளை தெரிவித்து ள்ளார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025