ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை உள்ளூராட்சி சபையை, நகர சபையாக மாற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில், அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கூட்ட மண்டபத்தில், நேற்று (01) நடைபெற்றது.
புள்ளிகள் அடிப்படையிலும், சட்ட வரையறைக்குள்ளும் இருந்தே புதிய உள்ளூராட்சி சபைகளையோ அல்லது சபைகளை தரமுயர்த்தவோ தற்போது முடியுமென, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் இதன்போது கூறினார்.
இதற்கமைய, மாகாண மட்டத்தில் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைய செயற்படுவதற்கும் அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும், அவர் கூறினார்.
இக் கூட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேசத்தை மட்டும் கொண்ட நகர சபை அமைத்து, பாலமுனை, ஒலுவில், தீகவாபி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய மேலும் ஓர் உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதா அல்லது அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய நகர சபையை ஏற்படுத்துவதா, நகர சபையை ஏற்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், அதற்கான சட்டப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
அத்துடன், இது தொடர்பான விடயங்களை முன்னெடுப்பதாற்கான குழுவொன்றையும் அமைப்பதற்குத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
9 hours ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025