Freelancer / 2023 மே 20 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஸ்தலத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில், கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த ஏறாவூர் டிப்போவிற்குச் சொந்தமான பஸ் வண்டி, கல்முனையில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் ஏறாவூர் டிப்போவிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கிரான்குளம் விஸ்ணு கோயிலுக்கு முன்னால் தூங்கிக் கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 23 வயது இளைஞனை மோதிவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய கோக்குவரத்து பொலிஸார் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். R
51 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
55 minute ago