Janu / 2023 ஜூலை 27 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம் ஐ. எம். றியாஸ் அவர்களின் ஆலோசனையிலும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும், முஸ்லிம் வாலிபர் சங்கம் மாவடிப்பள்ளி கிளையின் அனுசரணையுடன் புதன்கிழமை (26) காலை முதல் மாலை வரை உளவியல் ஆலோசனை மற்றும் தலைமைத்துவ ஒருநாள் பயிற்சி பட்டறை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும் மாவடிப்பள்ளி YMMA யின் தலைவருமான எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையிலும், அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களின் ஒழுங்குபடுத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் 50 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு விரிவுரை மற்றும் செயற்பாட்டு ரீதியிலான பயிற்சிகளை பெற்றுக் கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்


4 minute ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 hours ago
7 hours ago
8 hours ago