Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 17 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன், அஸ்ஹர் இப்றாஹிம்
கொரோனா வைரஸ் காரணமாக முடங்கிருந்த அம்பாறை மாவட்ட கரும்பு அறுவடை, மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
அம்பாறை - ஹிங்குறாணை சீனித் தொழிற்சாலைக்குரிய கரும்பு பயிரிடப்படும் சில இடங்களில் அறுவடை தற்போது நடைபெற்றுவருகிறது. சுமார் 03 மாதங்கள் கரும்பு அறுவடை நடைபெறாமல் இருந்த காலத்தில் உற்பத்தியாளர்களும், கூலித் தொழிலாளிகளும் மிகுந்த சிரமத்துக்கு உட்பட்டிருந்தனர்.
எதுவித வருமானங்களையும் பெறமுடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு, வாழ்ந்து வந்தனர்.
தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, நிலைமை சீராகி வருவதால் மீண்டும் கரும்பு அறுவடை இடம்பெற்றுவருவதுடன், அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் சீனி உற்பத்திக்காக, ஹிங்குராணை சீனித் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால் கூலித் தொழிலாளர்களும், கரும்புச் செய்கையாளர்களும் வருமானம் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
4 hours ago