Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்களுக்கிடையே மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்த மோதலை காணொளி எடுத்த ஊடகவியலாளர்கள் குறித்து, கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை(15) மதியம் வைத்தியசாலையின் பின்வாசலில் நோயாளிகளான தமது உறவுகளை பார்வையிட வந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்துள்ளனர்.வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்படும் பாஸ் நடைமுறை ஊடாக பொதுமக்களை பார்வையாளராக அனுமதித்த வண்ணம் இருந்தனர்.
எனினும் சுமார் 1 மணித்தியாலயமாக கைக்குழந்தைகளுடன் வெயிலில் இருந்த தாய்மார்கள், சிறுவர்கள், பெரியோர்கள் பொறுமை இழந்து பாதுகாப்பு தரப்பினருடன் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.
ஆனால், பொதுமக்களுடன் பாதுகாப்பு தரப்பினர்கெட்ட வார்த்தைகளினால் ஏசி கலைந்து செல்லுமாறு கூறினர்.
இந்த வைத்தியசாலைக்கு நோயாளிகளை பார்வையிடுவதற்காக வெளியிடங்களில் இருந்து குறிப்பாக பொத்துவில், அக்கரைப்பற்று, பாலமுனை, நிந்தவூர், அட்டாளை சேனை உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கால்கடுக்க வெயிலில் நின்றமை தொடர்பாக அவ்விடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்று செய்திகளை சேகரித்தனர்.
அவ்வேளை, பாதுகாப்பு தரப்பினர் ஊடகவியலாளர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தல் விடுத்தனர்.
இதே வேளை கல்முனை வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இழுபறி ஏற்பட்டு பதற்ற நிலை உருவானது.
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை ஞாயிற்றுக்கிழமை(14) மாலை பார்வையிட வந்த மக்களுக்கும் வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இப்பதற்றம் ஏற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago