Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2024 பெப்ரவரி 24 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தமையால் வீட்டில் இருந்த பொருட்கள் தீக்கிரையானதுடன் வீட்டின் கூரைகள் சேதமாகியுள்ளது.
தீப்பற்றிய நேரத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பதுடன் தீப்பற்றிய வீட்டின் தீயை அணைக்க அயலவர்கள் போராடி தீயணைப்பை மேற்கொண்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் துரித நடவடிக்கையின் பயனாக விரைந்து வந்த கல்முனை மாநகர தீயணைப்பு வாகனமும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
தீயினால் வீட்டின் பொருட்கள் முற்றாக சேதமாகியதுடன் வீட்டின் கூரையும் அழிவடைந்துள்ளதுடன் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவிலை.
ஸ்தலத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்க விரைவாக தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளை பணித்திருந்தார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago