Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
உடல், உள ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களுக்கு, சுழற்சி முறையில் யோகாசன பயிற்சி வகுப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நேற்று (03) நடைபெற்றது.
இந்த யோகாசன பயிற்சிகளை, ஓய்வு நிலை அதிபரும் யோகாசன ஆசானுமாகிய யோக ஆச்சாரியார் கே.சந்திரலிங்கம் வழங்குகின்றார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜின் தலைமையில் நடைபெற்ற வகுப்புக்களை ஆரம்பிக்கும் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்துகொண்டார்.
முதற் கட்ட பயிற்சி வகுப்பில் பிரதேச செயலாளர் அதியசயராஜ் உட்பட பல ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர். வாரத்தில் மூன்று நாட்கள் இடம்பெறும் இந்த யோகாசன வகுப்புகள், சேனைக்குடியிருப்பில் அமைந்துள்ள விதாதா வள நிலைய கட்டடத்தில் நடைபெறுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago