2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாணவர்களை பதிவு செய்தல்

Editorial   / 2020 மே 31 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்குப் பலக்லைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழிப் பீடத்துக்கு 2018/2019 கல்வியாண்டுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள், www.seu.ac.lk எனும் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தினூடாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இன்று (31) அறிவித்துள்ளார்.

இம்மாதம் 06ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு பதிவு செய்துகொள்ளுமாறும், பதிவு செய்யாதவறியவர்கள் பின்னர் அனுமதிக்கப்படமாட்டார்களெனவும், அவர் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இணையத்தள ஒருங்கிணைப்பாளரை 0761313778 எனும் அலைபேசி இலக்கத்துடனும் சிரேஷ்ட உதவிப் பதிவாளரை 0718035346 எனும் அலைபேசி இலக்கத்துடனும் தொடர்புகொண்டு, மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .