Mayu / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கல்வி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 40 மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட மென்திறன் பயிற்சி (Soft Skills Training) நேற்று (08) புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

நிலயப் பணிப்பாளர் ரி.இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விசேட பயிற்சிப் பட்டறையில், மாற்றுத்திறனாளிகள்சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பயிற்சிப் பட்டறையின் அங்குரார்ப்பண நிகழ்வில், க.செல்வ பிரகாஷ் - நைட்டா (NAITA) நிறுவன பயிற்சி அதிகாரி, வி.ரி.சகாதேவராஜா - ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், கே.பிரதீஸ்வரன் - விவேகானந்தர் தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி நிறைவேற்றுப் பணிப்பாளர், டாக்டர் நொயல் - அகிலாஸ் பவுண்டேஷன் பணிப்பாளர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

பயிற்சியில் கலந்துகொண்ட பயனாளர்களுக்குத் தொழில்சார் அடையாளத்தை வழங்கும் நோக்கில், நைட்டா (NAITA) நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சீருடைகளும் இதன்போது உத்தியோகபூர்வமாக விநியோகிக்கப்பட்டன.

இப்பயிற்சியானது மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு, அவர்களின் எதிர்காலத் தொழில் முயற்சிகளுக்குப் பெரும் உந்துசக்தியாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வி.ரி.சகாதேவராஜா

2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026