Editorial / 2020 ஜூன் 07 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்
கல்முனைக்குடி 2ஆம் குறிச்சியில் வீடொன்றில் இன்று (07) பிற்பகல் 3.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், குறித்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.
கல்முனை செய்லான் வீதியில் அமைந்துள்ள ஆதம்பாவா மீராசாஹிப் என்பவரது வீட்டிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்படும் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
புதிதாக கட்டட வேலைகள் நடைபெற்ற வீட்டில், மாடுகள் உண்பதற்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோலில் தீ பரவியதால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மரத் தளபாடங்கள் உட்பட பெறுமதியான சொத்துகள் நாசமாகியுள்ளன.
ஸ்தலத்துக்கு வருகைதந்த கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்தினார்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago