2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'கல்முனையில் மேலும் 21 மாடுகள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன'

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனை நகர பொதுச் சந்தையில் நடமாடிய மேலும் 21 மாடுகள் இன்று திங்கட்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்நடவடிக்கை தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.தண்டப்பணம் அறவிடப்பட்ட பின்னர் விடுவிக்கப்படும் இம்மாடுகளை தமது சொந்த இடங்களில் வைத்து பராமரிக்கத் தவறும் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவை மீண்டும் கைப்பற்றப்பட்டு  நீதிமன்ற அனுமதியுடன் அரசுடமையாக்கப்படும் என்றார்.

மேலும்,நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகளை கைப்பற்றும் நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நேற்று மாலை 20 மாடுகள் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாடுகள் யாவும் அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து தலா ஒரு மாட்டுக்கு 2,000 ரூபாய் வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டு விடுவிக்கப்படும்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்களினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டே கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகர முதல்வர் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .