Super User / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல். அப்துல் அஸீஸ்)
சமுர்த்தி வங்கிச் சங்கங்களின் ஊடாக மின்சார வசதியற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் மின்சார எரிசக்தி அமைச்சும் செய்து கொண்ட உடன்படிக்கைக்கமைய, மின்சார வசதியற்ற வறிய குடும்பங்களுக்கு மின்சார இணைப்பை பெற்றுக் கொள்வதற்காக சமுர்த்தி வங்கி சங்கங்களின் மூலம் முப்பதாயிரம் ரூபாய் கடன் தொகையினை ஆறுமாத காலத்தில் மீளளிப்பு செய்யக் கூடியவாறான வேலைத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிரூபங்கள் பெரும்பாலான பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து கல்முனை பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தலைமைக் காரியாலய முகாமையாளர் எச்.எம்.எம்.அலீமிடம் வினவியபோது, கல்முனை பிரதேச செயலகத்துக்கு இவ்வாறான சுற்றுநிரூபம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக ஜனாதிபதியின் 'இலங்கை மக்கள் அனைவருக்கும் மின்சார வசதியை பெற்றுக் கொடுத்தல்' எனும் வேலைத்திட்டம் நிறைவு பெற வழிவகுக்கும் எனவும் கூறினார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago