A.P.Mathan / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரின் அதிபராகக் கடமையாற்றிய எஸ்.எல்.அப்துல் றஹீம் இடம்மாற்றம் பெற்றுச் செல்வதையொட்டி அல்-மனார் மத்திய கல்லூரியின் கல்விச் சமூகத்தினர் வழங்கிய பிரியாவிடை வைபவம் நேற்று சனிக்கிழமை அல்-மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் தற்போதைய அதிபர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முன்னாள் அதிபர் றஹீம் - மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரால் கௌரவிக்கப்பட்டார்.
இவ்வைபவத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் பேசுகையில்:
முன்னாள் அதிபர் எஸ்.எல்.றஹீம் ஆழ்ந்த கல்விச் சிந்தனையுடையவர். இவர் எனது நண்பர் என்பதற்கப்பால் சிறந்த ஆலோசகர். ஓர் உன்னதமான பாடசாலையை உருவாக்கும் அத்தனை திட்டங்களையும் கொண்டவர் என்றார்.
16 minute ago
25 minute ago
3 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
3 hours ago
27 Oct 2025