Super User / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், அபதுல் அஸீஸ்)
மாளிகைக்காடு முஸ்லிம் மையவாடியிலிருந்து நேற்று தோண்டியெடுக்கப்பட்ட அப்துல் மனாப் நிஜாமியா எனும் பெண்ணின் மரணம் தற்கொலை மூலம் நிகழ்ந்ததென சட்ட வைத்திய நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர்களான டிக்கிரிபண்டா குணதிலக, எம்.எம்.ஏ.ரகுமான் ஆகியோர் பிரேதத்தை பரிசோதனை செய்த பின்னர் மேற்படி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட இப்;பிரேதம் நேற்று கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.றிஸ்வி முன்னிலையில் மாளிகைக்காடு முஸ்லிம் மையவாடியிலிருந்து கல்முனைப் பொலிஸாரால் தோண்டியெடுக்கப்பட்டது.
கடந்த ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி இந்தப் பெண்ணின் சடலம், சாய்ந்தமருது 16ஆம் பிரிவிலுள்ள பெலிவேரியன் சுனாமி வீட்டுத் திட்டத்திலுள்ள அவரின் வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
இந்த நிலையில், இறந்த பெண்ணின் மாமனாரான (கணவருடைய தந்தை) இப்றாலெப்பை அப்துல் ரசாக் என்பவர் இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து பொலிஸில் செய்த முறைப்பாட்டினையடுத்தே, சடலம் தோண்டியெடுக்கப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இப்பிரேதத்தினைப் பரிசோதனைக்குட்படுத்தியதன் அடிப்படையில், குறித்த பெண்ணின் மரணம் தற்கொலையால் நிகழ்ந்தது என வைத்திய நிபுணர்கள் அறிவித்துள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க பிரேதம் தோண்டியெடுக்கப்பட்ட அதே இடத்தில் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025