Menaka Mookandi / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
ஆலங்குளம் - அட்டாளைச்சேனை பகுதிகளுக்கிடையில் பாவங்காய் வீதியினூடாக போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பஸ் சேவை நிறுத்தப்பட்டமை தொடர்பில் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கும் அதேவேளை, மீண்டும் - குறித்த பஸ் சேவையினை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள கிழக்கு மாகாணசபை அமைச்சரொருவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆலங்குளம் - அட்டாளைச்சேனை பகுதிகளுக்கிடையிலான பஸ் சேவை பின்னர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
ஆலங்குளம், சம்புநகர், முல்லைத்தீவு போன்று தூரப் பகுதிகளிலுள்ள மக்கள் தமது தேவைகளுக்காக அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு சென்றுவரும் பொருட்டு மேற்படி பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மேற்படி பாவங்காய் வீதியினூடாக குறித்த பஸ் சேவை நடத்தப்பட்டு வந்தது. ஆயினும், எவ்வித அறிவித்தலுமின்றி இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் தமது போக்குவரத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025