Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 03 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று, டிப்பமடு வயல் பிரதேசத்தில் வேளாண்மை காவலில் இருந்த விவசாயி ஒருவர் நேற்று ஞயிற்றுக்கிழமை இரவு யானைத் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிப்பமடு வயல் பிரதேசத்தில் வழமைபோல் வேளாண்மை காவலுக்காக இருந்தவேளை சம்பவதினம் இரவு 11.30 மணியளவில் யானையை விரட்ட முற்பட்டவேளை விவசாயியை யானை தாக்கியுள்ளது.
இத்தாக்குதலினால் அக்கரைப்பற்று 7ஆம் பிரிவை சேர்ந்த பென்டா 38 வயதுடைய குடும்பஸ்தவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வயல் பிரதேசங்களில் அண்மைகாலங்களாக யானைகளின் அட்டகாசங்களினால் நெல் வேளாண்மை செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யானைகளை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் பலவேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
38 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
38 minute ago
1 hours ago
4 hours ago